

இந்தியாவில் இப்போது நடைபெறும் சம்பவங்கள் குறித்து அன்றாடம் பல கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தென் பிராந்தியக் கிளை ஆதரவில், ஜனநாயகம்குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். இந்த ஆராய்ச்சி தொடர்பாக நான் சந்தித்த கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அனைவருமே இந்தியாவின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பதற்கு மக்களாகிய நாம் பொறுப்பாளி இல்லையா? எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளைக் குறை சொல்கிறோம்; அவர்கள் என்ன வேற்றுக்கிரகவாசிகளா?
மக்களுடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்குத்தான் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால், நான் சந்தித்த சில அரசியல்வாதிகளிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வேலை’ என்று அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்றால், கட்சியில் உறுப்பினராகச் சில காலம் இருப்பது அவசியம் என்பதால், அரசியல் கட்சியில் இருப்பதாகவும் அந்தக் கட்சிக்குள் மக்களுடைய பிரச்சினைகள ்குறித்து விவாதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
மக்களின் தேவைக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை இட்டு நிரப்புவது யார், எப்படி? இதற்குத் தீர்வுதான் என்ன?
கே. தீபமாலா,மின்னஞ்சல் வழியாக...