

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகில் தலித் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் சாதிகள் தொழிலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
அதாவது, சாதியின் அடிப்படை தகர்க்கப்பட்டு நீண்ட காலமாகியும் சாதி உணர்வு மட்டும் இன்னும் நீடித்து நிலைத்திருப்பது விசித்திரமாக உள்ளது.
சாதியின் பெயரால் இத்தகைய கொடுமைகள் நிகழும் வரை நாம் முன்னேறியிருப்பதாகக் கூறிக்கொள்வது வெறும் மாயைதான்.
- அ. குருநாதன்,மதுரை.