

மாநகரப் பேருந்துகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மற்றவர்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால், முதியோர் அவதிப்படுகிறார்கள் என்ற செய்தியைப் படித்தபோது மனம் வலித்தது.
உட்கார்ந்து பயணம் செய்யும் சில இளவயதினர் முதியோர்களுக்கு இருக்கை தராமல் மனிதாபிமானமின்றி இருக்கிறார்கள்.
இள வயதினரின் மனப் பக்குவம் மாற வேண்டும். முதியோர்களைத் தங்கள் பெற்றோர்களாக நினைத்து தங்கள் இருக்கைகளை அவர்களுக்குத் தந்து உதவ வேண்டும்.
இதற்கு சட்டம் தேவையில்லை; மனிதாபிமானம்தான் வேண்டும்!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.