

ஈரோடு மாவட்டம் - பெருந்துறையில் கோக-கோலா ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்த 5 வட்டங்களில் ஈரோடு, பவானி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் போன்ற வட்டங்கள் நீர் வளம் உள்ளவை.
பெருந்துறை மற்றும் அந்தியூர் ஆகிய வட்டங்கள் ஆறு மற்றும் வாய்க்கால் வசதி குறைவாக உள்ள காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். கோக் நிறுவனத்துக்கு அனுமதி மறுத்திருப்பது பெருந்துறைப் பகுதி விவசாயிகளுக்கு மட்டும் அல்ல; அங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
சுற்றுப்புறச் சூழலுக்கு பாதகமில்லாமல் புதிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்பதே பெரும்பாலோனோரின் விருப்பம்.
- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.