

சர்வதேசக் குழந்தைகள் புத்தக நாளை முன்னிட்டு ‘இன்று அன்று’ பகுதியில் வெளியிடப்பட்ட பதிவு மிகவும் அவசியமான ஒன்று.
பாடப் புத்தகங்கள் தவிர மற்ற புத்தகங்களை குழந்தைகளிடம் கொண்டுசெல்வதை பள்ளிகளும் விரும்புவதில்லை, பெரும்பாலான பெற்றோர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.
சுயமாகச் சிந்திக்க வைக்கக்கூடிய புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பதில் பள்ளிகளும், பெற்றோரும் ஆர்வம் காட்டினால் அது பல நன்மைகளை விளைவிக்கும்.
புத்தகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட சர்வதேசக் குழந்தைகள் புத்தக நாள் போன்ற நாட்கள் பயன்படவேண்டும்.
- முனைவர் வா. நேரு, தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்,மதுரை.