

தன்னைக் காதலிக்கவில்லை என்பதற்காகப் பள்ளி மாணவியை, பள்ளியில் பணிபுரியும் ஊழியரே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சி தருகிறது.
41 வயதான அந்த நபர், பள்ளியில் படிக்கும் இளம் பெண்ணை வற்புறுத்தி, தன்னைக் காதலிக்க வேண்டும் என்று தொந்தரவு செய்திருக்கிறார். அதுவே மிகப் பெரிய தவறு.
அதையும் தாண்டி, அந்தப் பெண்ணைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு அவருக்கு ஆத்திரம் வந்திருக்கிறது என்றால், இதை என்னவென்று சொல்ல? தவிர, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் நுழையும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்தனை பலவீனமாக இருந்திருப்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.
- வி. கமலாவதி,கோயமுத்தூர்.