

பெண்ணை வெறும் அலங்காரப் பொருளாக நினைப்பதால்தான் சிவப்பு நிறத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆரம்பத்தில் சிவப்பு நிறம் வெற்றி பெறுவதைப் போலத் தோன்றினாலும், காலப்போக்கில் நல்ல குணமும் திறமையும் மட்டுமே அந்த இடத்தைப் பிடித்துவிடுகின்றன.
சிவப்பு நிறப் பெண்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்கிறார்கள்; கருப்பு நிறப் பெண்கள் எல்லோரது வாழ்க்கையும் கலகலத்துப் போய்விட்டது என்று சொல்ல முடியுமா? நம் நாட்டு வெம்மைக்குக் கருப்புத் தோல்தான் பல நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படி இருந்தும் அந்த நிறத்தைப் பழிப்பது அறிவீனர்களின் செயலாகத்தான் தெரிகிறது. எந்த நிறமானாலும் சரி, மனதில் நல்ல எண்ணங்களைப் படர விடுங்கள். முகம் தானாகவே பூவாக மலர்ந்து பிறரை ஈர்க்கும். அந்த ஈர்ப்பு இயல்பானதாக, மனதுக்கு நிறைவானதாக, நிரந்தரமாக இருக்கும்.
- ஜே. லூர்து,மதுரை.