

‘‘வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளைக்கூடப் பாசத்துடன் வளர்க்கிறார்கள். ஆனால், நாங்கள் திருநங்கைகள் என்று தெரிந்ததுமே பெற்றவர்களால் அடித்துவிரட்டப்படுகிற கொடுமையை என்னவென்று சொல்ல’’ என்று கதறியிருக்கும் திருநங்கை பூஜாவின் வரிகளைப் படித்தபோது மனம் கலங்கியது.
பல்வேறு பெயர்களில் அழைத்து இழிவுபடுத்தப்பட்டவர்களைத் தனது ஆட்சியில் திருநங்கை என்று பெயர் சூட்டி கவுரவப்படுத்தினார் கருணாநிதி.
தற்போது திருநங்கைகளுக்குச் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற தனிநபர் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நேரத்தில், அவமானங்களைக் கடந்து தனது வாழ்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டு மற்ற திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் பூஜா பற்றிய கட்டுரை சரியான நேரத்தில் வெளியாகியிருக்கிறது.
அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு தந்து அவர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.