

‘தி இந்து’ நாளிதழ், செய்திகளையும் தாண்டி, தொடர்ந்து சிறப்பான கட்டுரைகளைத் தருகிறது.
மக்கள் பல்வேறு புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள ‘தி இந்து’ உதவுகிறது. நியூட்ரினோ ஆய்வு சம்பந்தமாக என்.ராமதுரை எழுதிய கட்டுரை படித்தேன்.
நியூட்ரினோ சம்பந்தமாகப் பல்வேறு செய்திகள் பல்வேறு கருத்துகளுடன் வருகின்றன.
அரசியல் உள்நோக்கம் கொண்டு விவாதிப்பது அறிவியல் முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுத்தும். மக்களைக் குழப்புவதற்கும், அதில் ஆதாயம் அடைவதற்கும் மட்டுமே அது பயன்படும். அரசியல்வாதிகள் அனைத்துத் துறையிலும் தேர்ந்தவர்கள் அல்ல.
சரியான நேர்மையான அரசியல்வாதிகள், துறை சார்ந்த அறிவாளிகளின் கருத்தறிந்து செயல்படுவதே சமூக வளர்ச்சிக்குப் பயன்படும்.
- ராமசுப்ரமணியன்,‘தி இந்து’ இணையதளத்தில்…