

காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு இஸ்ரேலிய பாணியில் தனிக் குடியிருப்பு ஏற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சய்யீத் அறிவித்திருப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
1899 முதல் 1905 வரை இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்ட் கர்சான் பிரபு மேற்கு வங்காளத்தை முஸ்லிம்கள் வாழும் பகுதி என்றும் இந்துக்கள் வாழும் பகுதி என்றும் பிரித்தார்.
நாளடைவில் இத்திட்டம் தோல்வியடைந்து, வங்க மொழி பேசுபவர்கள் என்றும் வங்க மொழி பேசாதவர்கள் என்றும் மக்களிடையே புதிய பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதால், மீண்டும் வங்காளம் இணைக்கப்பட்டது வரலாறு.
காஷ்மீரில் மதநல்லிணக்கத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதுதான் மத்திய - மாநில அரசுகளின் நோக்கமாக இருக்கவேண்டுமேயன்றி, அரசியல் லாபத்துக்காக மதரீதியாக காஷ்மீரை மேலும் துண்டாட நினைத்தால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வே ஏற்படாது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.