

விவசாய விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறுவது முடிவே இல்லாத தொடர்கதையாகிவிட்டது.
பல ஆண்டுகளாக தீவிரமான விவசாயத்தை மேற்கொண்டதால் நாட்டின் விவசாய நிலங்களின் மண் வளம் குறைந்து, விளைச்சலும் குறைந்து விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
இந்நிலையில், மண் வளமிழந்துபோவது போன்ற பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாமல், அரசின் ஒத்துழைப்புடன் பலவகை மண்செறிவூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்பத்தி வளமிழந்த மண்ணை வளமாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- விஜய் ஆனந்த் சிதம்பரம்,கோயமுத்தூர்.