

இசையைத் தன் மூச்சாகவும், தான் சார்ந்த இயக்கத்தையும், சமூகத்தையும் இருகண்களாகப் பாவித்து வாழ்ந்த அந்தக் கலைஞன் மறைந்தாலும், அவரது புகழ் என்றும் மங்காது, மறையாது.
அவர் பாடல்கள் இஸ்லாத்தையும், அவர் சார்ந்த இயக்கத்தையும் கடந்து எல்லா தமிழர்களின் காதுகளிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தமிழ் இசை உள்ள வரையிலும் தமிழர்கள் உள்ளத்தில் அவர் இசைபட வாழ்வார் என்பது திண்ணம்!
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.