

‘ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மலையேற்ற வீரர்களா?’ செய்திக் கட்டுரை நிதர்சனமானதுதான். அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இந்நடைமுறை, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்கள் சான்று அளிக்கவேண்டும் என்பது.
இதனால், வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட வயோதிக ஓய்வூதியர்களுக்குத் தொடரும் இன்னல்களே அதிகம். ஒருவேளை, இச்சான்றிதழால் பலன் இருக்கும் என்று அரசு கருதினால், கருவூல அலுவலர்களே - கண்காணிப்பாளர் அளவில் உள்ளோர் சான்று அளிக்கலாமே.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் புதுப்புதுப் படிவங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது அரசு.
படிவங்களை நிரப்புவதற்கென்று விவரம் அறியாதோர், மற்றவர்களைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது. அதற்கும் உரிய தகுதிபெற்றவர்களை, சில்லறைக் கணக்கு ஊதியத்தின் அடிப்படையில் நியமித்துக்கொள்ள கருவூல அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் முதியோர்கள் தினம் என்று நினைவு கூர்கிறோம். ஓய்வூதியர்களும் முதியோர்கள்தானே!
- சந்திரா மனோகரன்,ஈரோடு.