

‘முதலில் சுஹாசினியின் விமர்சனத்தில் தரம் வேண்டும்!’ கட்டுரை கருத்துரிமையைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. காசு கொடுத்துத் திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளர்.
அவர் தான் பணம் செலவழித்து பெற்ற பொருள்குறித்து கருத்துத் தெரிவிக்க கூடாது என்று சொல்லும் இவர்கள், பொருளை விற்க கடைத் தெருவுக்கு வந்திருக்கவே கூடாது.
சரி, ஃபேஸ்புக்கில் விமர்சிப்பவர்களால்தான் திரைப்படங்கள் பாதிக்கின்றன என்று கொண்டால், அதனால் படங்கள் வருவது குறைந்துவிட்டதா? இந்த ஃபேஸ்புக் காலத்தில்தான் மிக அதிக படங்கள் வெளிவந்து நிறைந்து வழிகின்றன. விமர்சிப்பார்கள் என்று பயந்து எத்தனை பேர் தரமான படங்களை எடுக்கிறார்கள்?
- சரவணகுமார்,துபாய்.