

சில மாதங்களுக்கு முன் கண்ட தண்ணீர் இல்லாத வறண்ட ஏரி, குளம்பற்றிய காட்சியை இன்று செய்தியாகப் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
குளத்தில் தண்ணீர் இல்லையே என்ற ஆதங்கம் கண்ணீரை வரவழைத்தது. நித்தம் பார்ப்பவர்களின் நெஞ்சம் நிச்சயம் வறண்டிருக்கும்.
மழை நீரைக் குளத்துக்குத் திருப்பும் பொருட்டு, நிறைய பொருட்செலவில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர்க் கால்வாயும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால், சமீபத்தில் பெய்த மழையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், கழிவு நீரோடையில் கலந்ததுதான் மிச்சம். இத்தகைய செயல்பாடுகள் நீர்நிலைகளுக்கு நாம் எந்தளவுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
செங்கல்பட்டில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவருவதை எச்சரிக்கையாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகாரிகளின் அலட்சியமும், பொதுமக்களின் அவசரமும் ஒருவருக்கொருவர் குறைகூறுவதில்தான் முடியுமே தவிர, பிரச்சினைக்கு விடிவாக அமையாது.
-கி. ரெங்கராஜன்,சென்னை.