மானிய விஷயத்தில் கவனம்

மானிய விஷயத்தில் கவனம்
Updated on
1 min read

எரிவாயு மானியம் பெறுவோர் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையின்போது அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில். பொருளாதார நிபுணர்களை மட்டும் கலந்தாலோசிக்காமல் அடித்தட்டு மக்கள் நலனையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மானியத்தில் மிச்சப்படுத்தித்தான் கல்வி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பெரிய நிறுவனங்கள், வசதி படைத்தவர்களிடமிருந்து, அவர்களது லாபத்தில், மிகச் சிறிய பங்கை அரசு வசூலித்தாலே, நாட்டில் கல்வி வசதியை எவ்வளவோ மேம்படுத்த முடியும்.

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in