

‘செம்மர வனங்களில் ரத்தம் வடிவது ஏன்?’ கட்டுரையைப் படித்தேன். இன்று நாட்டில் எங்கு, என்ன பிரச்சினை நடந்தாலும், உடனே அதைத் தங்களது அரசியல் லாபத்துக்காக பிரச்சினையின் மையக் கருவை மாற்றி, அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்கின்றன அரசியல் கட்சிகள்.
இந்நிலையில், மிகவும் நடுநிலையாக, நேர்மையாக அப்பாவி கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைப் பதிவுசெய்திருக்கிறீர்கள்.
தெலுங்கு தமிழர் பிரச்சினையாக உருமாற்றி, அதன் மூலம் அரசியல் மற்றும் மாஃபியா கும்பல்கள் தப்பித்துக்கொள்ள இயலாதவாறு, சரியான கோணத்தில் பிரச்சினையை வெளிப்படுத்தி, அதற்கேற்ப அதில் தொடர்புள்ள அனைவரது முகத்தையும் அடையாளம் காணக் கோருவதாக அமைந்துள்ளது கட்டுரை.
- கே. எஸ். கருணா பிரசாத்,மின்னஞ்சல் வழியாக…