

‘அஜிதனும் அரசுப் பள்ளியும்’ கட்டுரை ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள பாசத்தை வெளிக்காட்டியது. அஜிதனைப் புரிந்துகொண்டு அவரை நல்வழிப்படுத்திய தந்தை வியப்புக்குரியவர். அஜிதன் அரசுப் பள்ளியில் அனுபவப் பாடத்தைப் படித்து, வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டார். வாழ்க்கையில் படிப்பறிவைவிட அனுபவ அறிவே சிறந்தது. ஒவ்வொரு துறையிலும் அவர்கள் அனுபவ அறிவுபெற பெற்றோர் உதவ வேண்டும். அஜிதனுக்குக் கிடைத்த தந்தை, உலகத்திலேயே அதிகமாக அவனை நேசிக்கக்கூடியவர். அதேபோல்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் ஒரு ரோல் மாடல். அஜிதன் இன்று அடைந்திருக்கக்கூடிய அனைத்து வெற்றிக்கும் காரணம் அவரது தந்தையே.
- வே. வேல்சித்தார்த்தன்,
எட்டாம் வகுப்பு, ஸ்ரீலதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக். பள்ளி, பொள்ளாச்சி.