

பிஹார் மாநிலம் கயா நகரத்தில் பிச்சைக்காரர்கள் தங்களுக்கென ஒரு வங்கியைத் திறந்திருக்கிறார்கள்.
அதில், ஒரு உறுப்பினர் தனது குடும் பத்தில் உள்ளவர்களின் தீக்காய சிகிச்சைக்காக, எந்தவித விண்ணப்பமும் அடமானமும் இல்லாமல் உடனடியாகப் பணத்தை பெற்று, அவசரகாலத்தில் பயனடைந்ததுபற்றித் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் துரித செயல்பாட்டின் மூலம், மற்ற வங்கிகளுக்கு இவ்வங்கி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ‘எங்கள் வங்கி உங்கள் நண்பன்’ என்று விளம்பரம் செய்வதால் மட்டும் பயனில்லை. அதைச் செயல்படுத்திக்காட்டியிருக்கிறது பிச்சைக்காரர்கள் நடத்தும் இந்த வங்கி.
இவ்வங்கியின் செயல்பாட்டுக்கு அந்த மாநில அரசின் ஊக்குவிப்பும் ஒரு காரணம் என்பதுதான் அதன் முத்தாய்ப்பு.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.