

‘அஜிதனும் அரசுப் பள்ளியும்’ கட்டுரை எனது கண்களைக் குளமாக்கியது. குழந்தைகளைப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்களால் அஜிதனும் நீங்களும் பட்ட இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவை.
குழந்தைப் பருவத்தை இழப்பது வெகு கொடுமை. ஆசிரியர்களால் அவ்விழப்பு ஏற்பட்டது என்றால், நம் ஆசிரியர் கல்வியின் போதாமையை இதன்மூலம் அறியலாம்.
இங்கிலாந்து, ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியம் ஆகியவற்றில் ஆசிரியர் கல்வி அதிநுட்பமானது. குழந்தையின் முகத்தைப் பார்த்தே அதன் சங்கடங்களை அறியும் திறன் வளர்க்கப்படுகிறது.
பிசியோ தெரபி பயிற்சியும் அளிக்கப்பட்டு, சிறு குறைகளைச் சரி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அஜிதனின் வளர்ச்சியில் உங்கள் பங்கு போற்றுதற்குரியது.
முதலில் தடுமாறினாலும் அன்பு என்ற சக்தி உங்களை மாற்றியுள்ளது. இந்தக் கட்டுரையை ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் படித்து உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.