

கருப்பு: தோலிலா, மனத்திலா? - தலையங்கக் கேள்வி எய்யப்பட்ட ஓர் அம்பு. நிறங்களை வித்தியாசப் படுத்திப் பார்க்க முடியாத குறையே நிறக்குருடு என அழைக்கப்படுகிறது.
பாஜக அமைச்சர்கள் மட்டுமல்லாமல், பிற துறையினரும் பெண்ணில் சிவப்பு நிறத்தைத் தேடும் நிறக்குருடு நோயால் அவதிப்படுகிறார்கள்.
சிறுபான்மையினர், மாற்று மதத்தவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரையும் குறிவைத்துத் தாக்கும் நம் அரசின் சித்தாந்தத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மனக்குருடு எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.
இதற்கான மருந்தை கார்ப்பரேட்களிடம் தேடாமல் மக்களிடம் தேடினால் கிடைக்கக் கூடும்.
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.