

பள்ளி தொடங்கிய நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பள்ளி திறந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் கற்கும் நாளாக அமைந்திட கற்பித்தலும் நடைபெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் இருந்து கற்பிப்பதையும் உறுதி செய்திடவும் அமைச்சர் முற்படுவார் என்று நம்புகிறேன். வேடிக்கை பார்க்க அல்ல நூல்கள்.
கற்றுத் தேறுவதற்காக. மாணவரது தேர்ச்சிக் குறைவுக்கு முக்கியக் காரணம், எல்லா நாட்களிலும் கற்றல்-கற்பித்தல் நடைபெறாததே. பாடத்திட்டங்கள் எல்லா நாட்களிலும் கற்பித்தல் நடைபெறும் என்ற அனுமானத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாதி நாட்கள்கூடக் கற்பித்தல் நடைபெறாது இருப்பது அறியப்படுகின்றது. ஆசிரியர் நியமனங்கள். மாறுதல்கள் விடுமுறைக் காலத்திலேயே முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.