

விளைநிலங்கள் வீட்டு மனைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும், திருமணக் கூடங்களாகவும் மாறிவருகின்றன.
நகர்ப்புறத்துக்கு அருகில் உள்ள பெரும்பான்மையான நிலங்கள் விவசாயம் செய்ய இயலாத வறண்ட பூமியாக மாறிவிட்டது.
விவசாயிகள் நகரத்தில் சித்தாள்களாகவும் மேஸ்திரியாகவும் சென்ட்ரிங் தொழிலாளியாகவும் வேலைசெய்து ஜீவனம் நடத்த வேண்டிய சூழல். நிலத்தடி நீர் இல்லாத இந்தக் காலத்தில் விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாகிவிட்டது. இந்நிலையில், கே.என். ராமசந்திரனின் கட்டுரை ஆறுதல் தருகிறது.
விளைச்சல் அதிகமானால் விவசாயம் செழிக்கும். விவசாய ஆராய்ச்சிக்கு மாநில, மைய அரசுகள் அதிகம் கவனம் செலுத்தினால்தான் விவசாயம் லாபம் தரும் தொழிலாக மாறும். இல்லையென்றால், பட்டினிச் சாவுகளும் விவசாயிகளின் தற்கொலைகளுமே மிஞ்சும்.
- டேனியல் ப்ரேம் குமார்,வேலூர்.