

சம்பா அரிசியை ஊறவைத்து, உரலில் இடித்து, மாவைப் பக்குவமாக வறுத்து, கம்பி பதத்தில் பாகுவைத்து, கருப்பட்டி பணியாரம் செய்ய மாவு சேர்க்கும் கைப்பக்குவம் இப்போது பெரும்பாலான மக்களுக்கு மறந்தேவிட்டது.
என்னங்க… தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு, ஸ்வீட்ஸுக்கு ஆர்டர் கொடுக்க மறந்திடாதீங்க? - இது இப்போதைய நவீன காலத்தில் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய வார்த்தை.
கிராமப்புறத்தில் பண்டிகைக் காலங்களில் மாவு இடித்து, பதம் பார்த்து பலகாரம் சுட்டது ஒரு பசுமையான அனுபவம். அதிரச மாவைத் திருட்டுத்தனமாக எடுத்துத் தின்னும் அனுபவம் இந்தக் கால இளைஞர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
வளர்ந்து வரும் நவீன யுகத்தில் இது போன்ற நினைவுகளைப் பதிவுசெய்யும் ‘கிராமஃபோன்’ படித்து ரசிக்க வேண்டிய பொக்கிஷம்.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.