

கல்வெட்டு ஆய்வாளர் செந்தீ நடராசன் ‘‘சங்க இலக்கியத்தில் சிவன், விஷ்ணு என்ற சொற்களே இல்லை’’ என்று சொல்வது பிழையான தகவல்.
கண்ணுதலோன் அல்லது முக்கண்ணன் என்ற பெயரால் வழங்கப்படுவது சிவபிரானே. சங்க இலக்கியங்களில் சிவபெருமான் பல இடங்களில் வருகின்றார்.
உதாரணமாக, சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களில், ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற நான்கு நூல்களிலும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியவை. சங்கப் பாடல்கள் ‘சிவன்’ என வெளிப்படையாகக் கூறாது. அவன் தன்மைகளையே பாடும். இளங்கோவடிகள் சிவன் கோயிலைப் ‘பிறவா யாக்கைப் பெரியோன் கோவில்’ என்றே பதிவுசெய்கிறார்.
புறநானூற்றுப் பாடல்கள் 55, 56, 91 ஆகியவற்றில் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகள் அடங்கியிருக்கின்றன.
- பேரா.முனைவர் ந. கிருஷ்ணன், ‘தி இந்து’ இணையதளத்தில்...