

பவானி சிங் வழக்கின் போக்கை மாற்றுகிறார், ஆச்சார்யா நன்றாக வாதாடினார் என்று சொல்பவர்களுக்கு:
இது மேல் முறையீட்டு மனு. சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறலாம். ஆனால், ஆதாரங்கள்? குற்றம்சாட்டப்பட்டவர் இல்லாமல் கையெழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டை சோதனை போட்டது சட்டப்படி தவறு என்கிறார் நீதிபதி.
ரூ.120 மதிப்புள்ள கல்லுக்கு எப்படி ரூ. 8,000 மதிப்பீடு கொடுத்தீர்கள் என்கிறார் இந்த நீதிபதி.
நேரடியாகவோ, தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் இல்லாதபோது மற்றவருடைய பணம் எப்படி ஜெயாவின் சொத்துமதிப்பில் சேர்ந்தது என்கிறார் இந்த நீதிபதி. கூட்டுச்சதிக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாதபோது, எப்படி அந்தப் பிரிவைச் சேர்த்தீர்கள் என்கிறார் இந்த நீதிபதி.
பவானி சிங் வாயே திறக்கவில்லை என்றாலும், ஆதாரங்கள் எங்கே போயின? ஆதாரங்களே இல்லாத நிலையில், வெறும் வாதத்தை வைத்துதான் குன்ஹா தீர்ப்பு கொடுத்தாரா? நீதிமன்ற ஆதாரங்களை யாராலும் மாற்ற இயலாது என்றபோது, இந்த நீதிபதி கேட்ட கேள்விகளை குன்ஹா கேட்கத் தவறியது ஏன்? பின்பு, எதை வைத்து 100 கோடி அபராதம்? 4 ஆண்டு சிறை?
- குமார்,‘தி இந்து’ இணையதளத்தில்...