

பெங்களூர் வேளாண் பல்கலைக் கழகத்தில் 13 தங்கப் பதக்கங்களை வென்று முதன்மை யாகத் தேறியிருக்கிறார் ஏழை விவசாயியின் மகள்.
மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, கணினிக் கல்வி மாத்திரமே வாழ்க்கையில் மேல்நிலை அடையச் செய்யும் என்ற மாணவ, மாணவியரின் எண்ணத்துக்கு மாறாக, இன்று அழிந்துகொண்டிருக்கும் விவசாயம் பற்றிய கல்வியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் 13 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
தங்கள் கல்விக்காகத் தங்கள் பெற்றோர் எத்தனை சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை மாணவ, மாணவிகள் உணர்ந்து, கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று தனது மகத்தான வெற்றியின் மூலம் சொல்லியிருக்கிறார் அந்த மாணவி. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
- கே.எஸ். முகமத் ஷூஐப். காயல்பட்டினம்.