

ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு எழுதிய, ‘போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு…’ எனும் கட்டுரை விரிவான தகவல்களுடன் அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டுரையைப் படித்தவுடன், ‘நீதிபதிகளாக யார் வர வேண்டும், என்பதைவிட யார் வரக் கூடாது என்று முடிவெடுத்தே போராட்டம் நடக்கிறதோ?’ எனும் சந்தேகம் வருகிறது. தற்போதுள்ள நியமனங்களின்படி நடைமுறையிலுள்ள 69% இடஒதுக்கீட்டைவிடக் கூடுதலாகவே நியமனங்கள் உள்ளதென்று ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், இந்தக் கட்டுரைக்குப் பிறகாவது உண்மை நிலைமையைப் புரிந்துகொண்டு போராட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள் என்று நம்புவோம். ஏனெனில் தேவையற்ற போராட்டங்கள் பல சிரமங்களை ஏற்படுத்தும்.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.