

நிலம் கையகப்படுத்துதல் மசோதாகுறித்து வானொலியில் உரையாற்றியுள்ள பிரதமர், அந்த மசோதா குறித்து எதிர்க் கட்சிகளும், மக்களும் எழுப்பும் மிக முக்கியமான இரண்டு கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை.
விவசாயிகளுக்கு நான்கு மடங்கு இழப்பீடு, விளைச்சலுக்கு உதவாத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை இந்த அரசுதான் விளக்க வேண்டும்.
80% விவசாயிகள் சம்மதம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஏற்படும் சமுதாய பாதிப்புகள்குறித்த கலந்தாய்வு போன்ற அதிமுக்கியமான இரண்டு அம்சங்களை இந்த அரசு நீக்க முடிவுசெய்திருப்பது குறித்து பிரதமர் எதுவும் கூறாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான விடை அளித்தால் மட்டுமே, மக்களிடம் இந்த மசோதா குறித்து அரசு கூறும் விளக்கங்கள் ஏற்புடையதாக இருக்கும்.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.