

அமெரிக்கா தன்னை மிஞ்சிய நாடுகள் எதுவும் உலகில் இருக்கக் கூடாது என்ற ஆணவத்தில் செய்யும் பல காரியங்களில் இதுவும் ஒன்று என்பதையே ‘பருவநிலை பயங்கரவாதம் உண்மையா?’ என்ற கட்டுரை விளக்குகிறது.
விஞ்ஞான முன்னேற்றம், தொழில்நுட்ப முன்னேற்றம் இவற்றில் அமெரிக்கா ஏனைய நாடுகளைவிட முதலில் இருக்கிறது. இருப்பினும், சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவைப் பெரிதும் கவலையடையச் செய்கிறது. சுற்றுச்சூழலைக் கெடுப்பதில் அமெரிக்கர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது ஜியோ இன்ஜினீயரிங் மூலம் பருவநிலை பயங்கரவாதத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. ரஷ்யா உள்நாட்டுப் பிரச்சினையில் சிக்கியுள்ளதால், சீனாவைத் தவிர, ஏனைய நாடுகள் இதில் கவனம் செலுத்தாது என்ற நம்பிக்கையில் அமெரிக்கா செயல்படுகிறது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்று அமெரிக்க விஞ்ஞானி கூறியிருப்பதிலிருந்து இதன் தாக்கத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்
- ஜீவன்.பி.கே. கும்பகோணம்.