

காலையில் ஹிண்டு பேப்பரும் கையில் ஃபில்டர் காபியும்தான் பெரும்பாலான வீடுகளில் தினசரி வாழ்க்கையின் துவக்கமாக இருந்ததை ‘கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?’ கட்டுரை நினைவுபடுத்தியது.
காபியின் பெருமையை (ஒரு நாளைக்கு இரண்டு தரம் மட்டும் குடிப்பதால் ஏற்படும் பலனை ) நவீன யுகத்தின் அறிவியல் வல்லுநர் ஆன்ட்ரூ ந்யூபெர்க்கின் பெரும் விற்பனையைப் பெற்ற தனது ‘ஹௌ காட் சேஞ்சஸ் யுவர் ப்ரைன்’ என்னும் புத்தகத்தில் விவரிக்கிறார்.
தஞ்சை அருகில் உள்ள கிராமத்தில் இருந்த எங்கள் இல்லத்தில் தினமும் ஒருமுறை மட்டும் காய்ச்சிய புதுப் பாலில், அன்றன்று கையால் சுற்றி இயக்கப்படும் இயந்திரத்தில் அப்போதே அரைத்த காபிப் பொடியால் ஒருதடவை மட்டும் இறக்கப்பட்ட டிகாக்ஷனில் தயாரான காலைக் காபிக்கு அமிர்தம்கூட ஈடாகாது என்று என் தந்தை கூறுவார்.
ஆனால் இப்போதோ, சமுதாயம் மற்றும் இல்லறப் பண்புகளையும் தொலைத்துவிட்டதோடு, சுவையான காபியையும் தொலைத்துவிட்டோம்.
- என்.கணபதி,மின்னஞ்சல் வழியாக…