

இந்தியாவில் ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு கருத்து தெரிவிப்பது, குறிப்பாக சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவது, இந்துத்துவாவினரின் செயல்பாடுகளைக் கண்டிப்பது, இதனால் ஏற்பட்ட இன்னல்களை டீஸ்டா செடல்வாட் என்ற பெண் பத்திரிகையாளர் கூறியிருப்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியின் செல்வாக்கு தெரிந்திருந்தும் அவரது கடந்த காலத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் செடல்வாட்டின் துணிச்சலை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
சிறுபான்மையினரின் அடையாளங்களை அழித்தொழிப்பதுதான் இந்துத்துவமா என்ற இவரது கேள்வி அவர்கள் காதுகளுக்கு எட்டுமா? சுதந்திரப் பேராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் தலைவர்களை வரலாற்றில் இருந்து மறைத்துவிட நினைக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கு இது ஒரு சரியான பாடம்தான்.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.