

மோடியின் இலங்கைப் பயணம் குறித்த கட்டுரை படித்தேன்.
புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அங்குள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கும் நீண்ட காலமாக நிலவிவரும் மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் முதன்மையான செயல்களாகும்.
இலங்கை அருகிலுள்ள இந்தியாவை விட்டுவிட்டு, சீனாவை அணுக என்ன காரணம் என்பதைக் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த நிலையை மாற்ற மோடி அரசு எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு நல்குவார்களேயானால், பிரச்சினைகள் தீர வாய்ப்புண்டு. இலங்கை அரசும், இந்திய அரசும் பழைய விஷயங்களை மறந்து தற்போதுள்ள பிரச்சினைகளின் தன்மைக்கு ஏற்ப நியாயத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டால் இலங்கை - இந்திய உறவு மேம்பட வழியுள்ளது.
- ஜீவன். பி.கே.கும்பகோணம்.