

வரலாறு ஒரு சக்கரம். திரும்பிக்கொண்டிருப்பதுதான் அதன் இயல்பு. கோகலே வழியில் பயணித்த மகாத்மா காந்தி, உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
அடித்தட்டு மக்களையும் அரவணைத்துச் சென்ற பாங்கு, மக்கள் இயக்கமாக காங்கிரஸை மாற்றியது. எளிமை போன்ற பண்புகள்தான் அவரது வெற்றிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்தன. குடிசைப் பகுதிகளுக்குச் செல்வது, அங்கு உணவு உண்பது என மகாத்மா வழியில் பயணிக்க ராகுல் காந்தி முயல்கிறார்.
ஆனால், இவற்றால் மட்டும் வெற்றி கிடைக்காது என்பதைச் சமீப கால அரசியல்
நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. கட்சியின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்புகளை அடித்தட்டு மக்களிடம் வழங்க வேண்டும். நேரு, படேல், அபுல்கலாம் ஆஸாத் போன்ற திறமையான தலைவர்களை காந்தி பயன்படுத்திக்கொண்டதுபோல் தகுதியானவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
துதிபாடிகளைத் தூர வைக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் எளிமையான தலைவராகவும் திகழ வேண்டும்.
- கேப்டன் யாசீன்,சென்னை.