

எழுத்தாளர் தொடங்கி, தொலைக்காட்சி ஊழியர்கள் வரை மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாவது தொடர்கிறது.
பொதுமக்கள் என்ற பெயரில் வன்முறைக் கும்பல் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்து, கேள்வி கேட்பாரின்றி காட்டுமிராண்டிகளாகச் செயல்படுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், நாகாலாந்து சிறை உடைப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘கும்பல் நியாயவான்களின் காலம்' என்கிற தலையங்கம், இப்படி எல்லாவற்றுக்கும் பொருந்தும் வகையில் சரியான காலகட்டத்தில் எழுதப்பட்ட, சரியான கருத்து.
- சு. இராமசுப்பிரமணியன்,தோவாளை