

தங்கள் கட்சி தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள்குறித்த நியாயமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய தார்மிகப் பொறுப்புள்ள கேஜ்ரிவால், இரண்டு முக்கியமான தலைவர்களை உயர் நிலைக் குழுவிலிருந்து வெளியேற்றியிருப்பது, அவர் எதேச்சாதிகார மனப்பான்மை கொண்டவரோ என்கிற தவறான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடக் கூடாது.
ஏனைய அரசியல்வாதிகள்போல் ஆட்சியும் அதிகாரமும் வந்தவுடன் தன்நிலை மறக்கின்ற தலைவராக அவர் மாறிவிடக் கூடாது.
‘ஆம் ஆத்மி’ என்பதன் பொருள் மாறா தன்மையைக் கட்சிக்குள்ளும் கேஜ்ரிவால் பேண வேண்டும்.
- அருணாசுந்தரராசன்,மானாமதுரை.