

நெரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனநாயகத்தின் குரல்வளை ‘தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (ஏ ) பிரிவு இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது’ என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புமூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
வலைதளங்களில் மற்றவரது கருத்தை ஆதரிப்பவர் களையும் பகிர்ந்துகொள்பவர்களையும் குற்றவாளிகளாகக் கருதி, அவர்களைக் கைது செய்ய வழிவகுக்கும் கொடுமையான அடக்குமுறைச் சட்டங்களிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
கட்டுரையாசிரியர் குறிப்பிடுவதுபோல் இந்தியா இப்போது முக்கியமான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது.
விரோதத்தை வளர்க்கும் குற்றச்செயல்கள், சாதி மத மோதல்களைத் தூண்டும் விதமாகவும் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து விரோதத்தை வளர்க்கும் விதமாகவும் பேசும் சில அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களை எதிர்த்துத் தங்கள் கருத்துக்களை வெளியிட சாமானிய மக்கள் சமூக ஊடகங்களைத்தான் நம்பியிருந்தார்கள்.
அந்த நம்பிக்கையைத் தகர்த்த 66 (ஏ) பிரிவு அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, மக்களுக்குப் பெரும்நிம்மதி அளித்த உச்ச நீதிமன்றத்துக்கு, சாமானிய மக்களின் சார்பாக ஒரு பெரிய சபாஷ்!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.