

சஞ்சயா பாரு ‘லீ களம்’ கட்டுரையில், லீயின் இந்தியாவுடனான தொடர்பையும் அவரது தலைமைப் பண்புகளையும் அழகாக விளக்கியிருந்தார்.
இயற்கை வளம் சற்றும் இல்லாத ஒரு நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குச் செதுக்கிவிட்டு, எந்த விதத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சிங்கப்பூரின் ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டும் அவரது பெயர் இருப்பதைப் பார்க்கும்போது, எல்லாவிதமான செயல்களுக்கும் தங்களையே முன்னிலைப்படுத்தும் நம் நாட்டு அரசியல் தலைவர்கள், லீயிடம் கற்க வேண்டிய முக்கியமான தலைமைப் பண்புகளில் இதுவும் ஒன்று என்றே தோன்றுகிறது.
- சொ. சந்தனக்குமார்,சிவகிரி.