சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது

சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது
Updated on
1 min read

குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இஸ்லாம் தோன்றிய ஆரம்பக் காலங்களில் சூழ்நிலை காரணமாகவும் மற்ற பல்வேறு காரணங்களுக்காகவும் இஸ்லாமியர்களிடம் குழந்தைத் திருமணம் நடைபெற்றிருக்கலாம்.

அதுவே, இஸ்லாமியச் சட்டம் கிடையாது. இப்போது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் என்பது ஒரு மதச்சார்பற்ற இந்தியச் சட்டம். இதில் குழந்தைகளின் உடல்நலன், கவுரவம், முன்னேற்றம், மனநிலை ஆகியவைதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தில் மதத்தை இணைத்துப் பார்ப்பதும் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று வாதிடுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மத்திய திருமணத் தடுப்புச் சட்டம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in