

எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் நன்றாக இருந்தன. மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், புகழின் உச்சம் தொட்டிருக்கிறார்.
1944-ல் வெளியான ‘ஹரிதாஸ்' திரைப்படம், இப்போதுள்ள விளம்பர உத்திகள் ஏதுமற்றநிலையில் கிட்டத்தட்ட 1,000 நாட்கள் ஓடியதை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.
“திருச்சியில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னைக்கு புகைவண்டியில் திரும்புகிறார் பாகவதர். வழியில், ஒரு புகைவண்டி நிலையத்தில் அவரை வரவேற்க மக்கள் கூட்டம் பூக்கூடைகளுடன் காத்திருக்கிறது, வண்டி அங்கு நிற்காது என்று தெரிந்தும்.
வண்டியும் வந்தது. நிற்காமல் சென்ற அந்த புகைவண்டியின்மீது மலர்மாரிப் பொழிந்தனர்.” அந்த அளவுக்கு மக்களைத் தன் பாட்டுத் திறத்தால் கவர்ந்த கலைஞர் தியாகராஜ பாகவதர்.
- வி. மஹாலிங்கம்,மின்னஞ்சல் வழியாக…