

தமிழ்த் தாய் வாழ்த்தைக்கூட ஆங்கிலத்தில் எழுதிப் பாடிய செய்தி மனதுக்கு வேதனையளிக்கிறது.
பேசுவதற்கு மட்டும்தானா நமது முதுமொழி என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே அம்மா- அப்பா என்ற சொல் மறந்து, மம்மி- டாடி என்ற சொல் அடித்தட்டுக் குழந்தைகளுக் குள்ளும் ஆழப்பதித்தாகிவிட்டது.
மாணவர்களையும், இளைஞர்களையும் நூலகங்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கிளாட் அல்வாரிஸ் போன்று பெற்றோர்களும், ராகுல் அல்வாரிஸ் போன்று பிள்ளைகளும் மாற வேண்டும் என்பதை ‘வீடில்லாப் புத்தகங்கள்’ கட்டுரையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கும் ராமகிருஷ்ணனைப் பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை.
-ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.