

கட்சியை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்று கேஜ்ரிவால் நினைப்பதாகவே தோன்றுகிறது, கேஜ்ரிவால் குறித்த க. திருநாவுக்கரசின் கட்டுரை படித்தபோது.
உயர்ந்த லட்சியம் மட்டுமல்ல, அதை அடையச் செல்லும் வழிமுறைகளும் மிகவும் முக்கியமானவை என்பது புலனாகிறது. தலைமைப் பதவி கொடுக்கும் நெருக்கடியும் எல்லாத் தலைவர்களுக்கும் உள்ள இயல்பான தன்முனைப்பும் அவரை அதை விட்டு விலகி நிற்கச் செய்கின்றனபோலும்.
பிற கட்சிகளைப் போன்றோ அல்லது பிற அரசியல் தலைவர்கள் போன்றோ தானும், தனது கட்சியும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பு இப்போது கேஜ்ரிவாலின் முன்பு நிற்கிறது.
அதை அவர் சரியாக மக்களின் முன்பு நிரூபிக்க வேண்டும். நேர்மை எனில், அது எல்லா பக்கங்களில் இருந்தும் இயல்பாக ஊற்றெடுத்து வர வேண்டும். கட்சி நடைமுறைகளில் செலுத்தப்படும் தனி நபர் ஆதிக்கம் ஆட்சியிலும் தொடரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
அவ்வாறான ஒரு நிலை உருவாகுமானால், மிக விரைவிலேயே கேஜ்ரிவால் டெல்லி மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.