

கண்ணனின் ‘நூல்கள் எரிக்கும் சுதந்திரம்’ கட்டுரை, சமூகத்தில் நிலவி வரும், இதுவரையிலும் யாராலும் எடுத்துச் சொல்லப்படாத ஒரு தீர்க்கமான பார்வையை முன்வைக்கிறது.
தமிழ்ச் சமூகத்தில் கல்வி பரவலாக்கப்பட்ட அந்தத் தொடக்க நாளிலிருந்து நூல்களின் மீதுள்ள மரியாதையும் துவங்கியிருக்கும் என நம்புகிறேன். மேலும், கற்றவர்களும் அறிஞர்களும் துறை சார்ந்த விற்பன்னர்களும் நூல்களைக் கற்றுத் தேறியதும்கூட நூல்களின் மீதுள்ள அளவு கடந்த மரியாதைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
பிரதிகள் என்ற முறையில் ஒரு நூலுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. இன்னமும் தமிழ்ச் சமூகம் முழுவதுமாக நவீனம் அடையவில்லை. அந்த நிலையைத் தமிழ்ச் சமூகம் எய்தும்போது ஒருவேளை கண்ணன் சொல்வதுபோன்ற நிலை ஏற்படலாம்.
ஒரு பதிப்பாளரான கண்ணன், இந்தக் கட்டுரையை எழுதியிருப்பது மிகவும் சுவாரஸ்யம் தரும் ஒன்று.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.