ஒரே முறை கட்டணம்

ஒரே முறை கட்டணம்
Updated on
1 min read

'சாலை வரிக் கட்டணத்தை வசூலிப்பதுபோல, மோட்டார் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை ஒரே தடவையாக ஏன் வசூலிக்கக் கூடாது?' என மத்திய, மாநில அரசுகளை உயர் நீதிமன்றம் கேட்டிருப்பது சரியே. சாலை வரியைக்கூட சில வருடங்களுக்கு முன்பு, வருடாவருடம்தான் வசூலித்துக்கொண்டிருந்தார்கள்.

அதிலுள்ள சிரமங்களைக் களைவதற்காக, பின் அது மோட்டார் வாகனம் விற்கப்படும்போதே ஒரே தடவையாக (One Time Tax-OTT) என வசூலிக்கப்பட்டது.

வாகனம் பயன்பாட்டில் இருக்கும் வரை, அதற்கு இன்சூரன்ஸும் தேவைதான். எனவே, அதை வருடாவருடம் என்றில்லாமல், ஒரே தடவையாக வசூலித்தால் வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் மிக வசதியாக இருக்கும். மேலும், இத்தகைய கேள்வி, உயர் நீதிமன்றத்திலிருந்து வராத அளவுக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமும், போக்குவரத்துத் துறையும் வாகன உற்பத்தித் துறையும், மத்திய-மாநில அரசுகளும் சேர்ந்து கூடி முடிவெடுத்திருக்க வேண்டும்.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in