

டென்னிஸ் உலக அரங்கில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி-கலப்பு இரட்டையர் பிரிவில் சுவிஸ் நாட்டு வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து, இந்தியாவின் லியாண்டர் பயஸ் பட்டம் வென்று நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
இதற்கு முன்னர் 2003-ல் மார்ட்டினா நவரத்திலோவா, 2010-ல் காரா ப்ளாக் ஆகியோருடன் இணைந்து பட்டம் பெற்றிருக்கிறார் பயஸ்.
மொத்தத்தில், கலப்பு இரட்டையர் பிரிவில், இத்துடன் ஏழு பட்டங்களும், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் எட்டு பட்டங்களும் வென்று அனைத்து நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று தன்னிகரற்ற டென்னிஸ் வீரராகத் திகழ்கிறார். என்ன இருந்தாலும், ஒற்றையர் பிரிவில் இந்தியா பயணம் செய்ய வேண்டிய தொலைவு இன்னும் வெகுதூரம் என்ற நிலைதான் நீடிக்கிறது.
‘தூரம் ஒருபோதும் தூரமாக இருப்பதில்லை' என்கிற நம்பிக்கையுடன் நமது வீரர்கள் புரிந்துகொண்டு செயல்பட வாழ்த்துவோம்.
- சந்திரா மனோகரன்,ஈரோடு.