

நீதியரசர் சந்துரு எழுதிய ‘யாருடன் போராடுகிறார்கள் நம் வழக்கறிஞர்கள்’ கட்டுரை, பெரும்பாலான தமிழ் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.
நீதிபதிகள் நியமனம் விஷயம் என்றில்லாது, பலவிதமான பொதுப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, தங்களது பணியைப் புறக்கணித்துவிட்டு வீதிக்கு வருபவர்களில் வழக்கறிஞர்களே முதலிடம் வகிக்கிறார்கள். தங்களை நம்பியிருக்கும் கட்சிக்காரர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடித்தரும் பொறுப்பு கொண்ட வழக்கறிஞர்கள், இன்னும் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.