

உலக அளவில் தனக்குக் கட்டுப்படாத ரஷ்யாவைத் தனிமைப்படுத்தவும், வளைகுடா நாடுகளில் ஐ.எஸ். அமைப்பின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் கச்சா எண்ணெய் விலையை அமெரிக்கா தனது கூட்டு நாடுகளுடன் இணைந்து உயரவிடாமல் தடுத்துவருகிறது.
அமெரிக்காவில் தேவையான எண்ணெய் வளம் இருந்தும் இதுவரை அதைப் பயன்படுத்திக்கொள்ளாதது அதன் ராஜதந்திரமே. ஓபெக் கூட்டமைப்பு எண்ணெய் உற்பத்தியைக் கூட்டினாலும் குறைத்தாலும் அமெரிக்காவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வளரும் நாடுகளுக்கு இது சாதகமான சூழ்நிலை என்றாலும்கூட, இந்தியா போன்ற நாடுகளில் இதை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே அனுபவித்துவருகின்றன.
சர்வதேச அளவில் அமெரிக்கா விரித்த வலையில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்தக் காலத்திலும் கச்சா எண்ணெய் விலையை அமெரிக்காவால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.