

பலதரப்பட்ட மொழிகள், இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டபோதிலும், அனைவருக்கும் சம உரிமை வழங்குவதிலும், அதனை அரசியல் சாசன முகப்புரையில் தன் மக்களுக்கும் உலகத்தாருக்கும் வெளிப்படுத்துவதிலும்தான் இந்தியாவின் பெருமை இருக்கிறது.
ஆனால், தற்போது அரசியல் சாசன முகப்புரையைத் திருத்த முயல்வது, அச்சத்தை ஏற்படுத்துகிறது. எரிகிற கொள்ளிக்குப் பயந்து எண்ணெய்ச் சட்டியில் விழுந்த கதையாகிறது, ஊழலுக்குப் பயந்து மதவாதத்தில் மாட்டிக்கொண்ட இந்திய மக்களின் நிலை.
கே. ஷஹாப் தீன்,மின்னஞ்சல் வழியாக…