

‘இந்தியாவிலிருந்து எங்களைப் போகச் சொல்லாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்ட தமிழக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் உருக்கமான வேண்டுகோளைப் படித்தேன்.
‘இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்து மைத்ரிபால சிறிசேனா பதவிக்கு வந்தாலும், தேர்தலுக்கு முன் ராஜபக்ச அரசவையில் அவர் இருந்ததால், தமிழர்களுக்கு முழுப் பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்குமா என்பது சந்தேகமே' என சில அகதிகள் கூறுவதில் நியாயம் இருக்கிறது.
எனவே, இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால், விவசாயமோ அல்லது வேலைவாய்ப்போ தங்களின் மறுவாழ்வுக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் அனுப்பிவிட்டு, தமிழகத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழகத்திலேயே வாழும் வகையில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தமிழக அரசும் மத்திய அரசும் முன் வர வேண்டும்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.