பால்சாக்கின் வறுமை

பால்சாக்கின் வறுமை
Updated on
1 min read

‘வீடில்லாப் புத்தகங்கள்' தொடரில் பிரெஞ்சுப் படைப்பாளி பால்சாக் பற்றி எழுத்தாளர் ராமகிருஷ்ணன் கூறிய தகவல்கள் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தன.

இலக்கியத்திலும் அதே அளவு உணவு விஷயத்திலும் அதீத நாட்டம் கொண்ட பிறிதொரு இலக்கியவாதி இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்பது ஐயமே. பால்சாக்கைப் பற்றி இன்னொரு தகவல் உண்டு.

ஒருமுறை அவர் இரவில் வெகுநேரம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருக்கும்போது வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டான். மேசை, பீரோ என்று அவன் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து பால்சாக் கேட்டாராம்: “எனக்குப் பகலில் கிடைக்காத பணமா உனக்கு இரவில் கிடைக்கப்போகிறது!”

- சந்திரா மனோகரன்,ஈரோடு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in